perestroika

பெரெஸ்ட்ரோய்கா

தமிழ் விளக்கம்

perestroika ரஷ்ய மொழியில் pere என்றால் மீண்டும் stroĭka என்றால் கட்டுவித்தல் அதாவது மீண்டும் எடுத்துக்காட்டுதல் என்று பொருள்படும். மிகையில் கோர்ப்பச்சேவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அதிபராக இருந்தபோது, 1980 ஆண்டுகளில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சமூக முழக்கமாக perestroika மற்றும் glasnost (மனநேர்மை, மனப்பூர்ணம், இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தெளிவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத, தெட்டத்தெளிவான) கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டது. வெளிப்படையான அரசு அதிகாரமும், ஓரளவு சந்தைப் பொருளாதாரத்திற்கு இடமளிக்கும் விதமாக ரஷ்யாவின் சோசலிசப் பொருளாதாரத்தை திறனுடன் செயல்படவைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முழக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், இக்கருத்துக்களின் தாக்கத்தால் ரஷ்ய சோசலிச ஒன்றியம் கலைவதற்கு கார்ணமாக அமைந்தது என்ற விமர்சனங்கள் உண்டு.

English

The Russian term, roughly meaning "restructuring." Social agency administrators and other organization officials in many nations increasingly use the term to describe their own organization's intent to change policies and practices.