performance evaluation
செயலாக்க / நிறைவேற்றுகை சார்ந்த மதிப்பீடு, சாதனை சார்ந்த மதிப்பீடு
தமிழ் விளக்கம்
ஒரு அரசுப் பணியாளரோ அல்லது ஒரு நிறுவனத்தின் ஊழியரோ, அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிப் பொறுப்புகளை எந்த அளவு செய்து முடித்திருக்கின்றார் என்பதை மதிப்பீடு செய்வது. இது அந்தப் பணியாளரின் மேற்பார்வையாளராலோ அல்ல்து நிர்வாகியாலோ, பிற பணியாளர்களின் கருத்தைக் கேட்டும், செயல் திறன் சோதனை முறைகளையும், அளவுகோள்களையும் உபயோகித்துச் செய்யப்படும்.
English
The systematic determination of the degree to which an employee or public servant achieves the goals specified in the employee's job description or performance objectives. This is done by a supervisor or administrator through interviews of peers, rating scales, and performance tests.