perinatal social work
இருபது வார கருமுதல் பிறந்த 28 நாள் வரை செய்யப்படும் சமூகப்பணி, பிறப்புக் காலச் சமூகப்பணி, பேறு காலச் சமூகப்பணி
தமிழ் விளக்கம்
குழந்தை பிறப்பதற்கு முந்தைய, பிரசவத்திற்கு பின்னான சில வார காலம் தாயினதும், பிறந்த குழந்தையின் நலனிலும் கவனம் செலுத்தும் சமூகப்பணியின் ஒரு சிறப்பு துறை. இந்த சமூகப்பணியாளர்கள் மருத்துவ மனைகளிலும், மகப்பேறு மருத்துவ மனைகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும், எய்ட்ஸ் நோயாளிகளின் நலம் பேணகங்களிலும், மருத்துவ சேவைகளை கண்காணிக்கும் ஒழுங்காற்று வாரியங்களிலும் பணிபுரிகிறார்கள். இவர்கள் எல்லோரும் தேசியப் பேறுகாலச் சமூகப்பணியாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பர்.
English
A professional specialization within social work that focuses on the psychosocial treatment of the mother, fetus, and newborn. Perinatal social workers are employed primarily in hospital settings and maternity medical facilities, but many also serve in public health settings, AIDS clinics, ethics centers, and private practice. Many belong to the National Association of Perinatal Social Workers (NAPSW).