peritoneal dialysis
வயிற்று உள்ளுறை கூழ்மப் பிரிப்பு, கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல், இடைச்சவ்வூடு மூலம் பிரித்தல், சிறுநீர் கலவை பிரிப்பு, குருதி / இரத்தச் சுத்திகரிப்பு
தமிழ் விளக்கம்
சிறுநீரகங்கள் உடல்நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சல்மேட்) உட்புறச் சமநிலையைப் பராமரிக்கின்றன. சுவாசித்தல் வழியாக வெளியேற்ற முடியாத அமில வளர்சிதை மாற்ற இறுதிப் பொருட்களையும் சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் கழிவுப் பொருட்களை அகற்றுவதை கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல் (dialysis) என்கிறோம். இது இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரித்தெடுக்கும் ஓர் செயல்பாடாகும். இது இருவகையில் செய்யப்படுகிறது 1. குருதி கூழ்மப்பிரிப்பு, 2. வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு
வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு - வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பில், கனிமங்கள் மற்றும் குளுக்கோஸ் கொண்ட தொற்றில்லாத கரைசல் சுற்றுவிரிக்குழிவு, குடலைச் சுற்றிய அடிவயிற்று உடல் குழிவு ஆகியவற்றினுள் குழாயின் மூலமாக செலுத்தப்படுகிறது. அங்கு உள்ளுறை மென்படலம், பகுதி சவ்வூடு பரவு மென்படலமாகச் செயல்படுகிறது. உள்ளுறை மென்படலம் அல்லது பெரிட்டோனியம் என்பது அடிவயிற்றுக் குழிவு மற்றும் உட்புற அடிவயிற்று உறுப்புக்கள் (வயிறு, மண்ணீரல், கல்லீரல் மற்றும் குடல்கள்) ஆகியவற்றைச் சூழ்ந்த இரத்தக் குழல்களைக் கொண்ட திசுக்களின் அடுக்காக இருக்கிறது. டயாலிசேட்டானது (Dialysate) சிறிது காலத்திற்கு அந்த இடத்தில் கழிவுப் பொருட்களை உட்கிரகிப்பதற்காக விடப்பட்டு பின்னர் அது குழாய் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் டயாசிலேட் நிரப்பப்படுவதும் கழிவுப்பொருட்களுடன் நீக்கப்படுவதும் ஒரு பரிமாற்றம் ஆகும். இந்தச் சுழற்சி அல்லது 'பரிமாற்றம்' பொதுவாக ஒரு நாளைக்கு 4-5 முறைகள் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன (சில நேரங்களில் பெரும்பாலும் இரவில் தானியங்கு அமைப்புகளின் மூலமாகச் செய்யப்படுகின்றன). தங்கு நேரம் என்பது டயாசிலேட் நோயாளியின் வயிற்றில் வைக்கப்பட்டிருக்கும் - கழிவுகளும் கூடுதல் நீரும் குருதியிலிருந்து வயிற்று உள்ளுறை மென்படலம் வழியே டயாசிலேட்டிற்கு நகர்கின்ற நேரத்தைக் குறிக்கும். நீக்கும் முறைமை என்பது தங்கு நேரத்தின் இறுதியில் கழிவுப் பொருட்களுடன் கூடிய டயாசிலேட்டை வெளியேற்றுவதாகும். நுண் வடிகட்டல் சவ்வூடுபரவல் மூலமாக நடைபெறுகிறது; கூழ்மப்பிரிப்புக் கரைசலில் உயர் செறிவில் குளுக்கோசு இருப்பதால் ஏற்படும் அழுத்தம் இரத்தத்தில் இருந்து திரவத்தை டயலிசேட்டினுள் நகர்த்துகிறது. அதன் விளைவாக சொட்டு சொட்டாக வெளியேற்றப்படுவதற்கு பதிலாக கூடுதலான திரவம் வெளியேற்றப்படுகிறது. வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு குருதி கூழ்மப் பிரித்தலைக் காட்டிலும் குறைவான வினைத்திறனுடையதாக இருக்கிறது. இருப்பினும் இது நீண்ட காலத்திற்கு செய்யப்படுவதால் அதே அளவில் கழிவுப்பொருட்களை நீக்குகிறது. வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு நோயாளியின் வீட்டில் செய்யப்படுகிறது. செவிலியர் உதவி ஆதரவாக இருக்குமென்றாலும் அது கட்டாயம் அல்ல. இது நோயாளிகளுக்குத் தொடர்ந்து கூழ்மப்பிரிப்பு மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்ட கால அட்டவணைப்படி வாரத்தில் பல நாட்கள் செல்வதிலிருந்து சுதந்திரம் அளிக்கிறது. மேலும் இதனைக் குறைந்த அளவிலான சில சிறப்பு உபகரணங்களுடன் பயணத்தின் போதும் செய்யலாம்.

English
See dialysis.