Perkins, Frances (1882-1965)
பெர்கின்ஸ், பிரான்சஸ் (1882-1965)
தமிழ் விளக்கம்
பெர்கின்ஸ், பிரான்சஸ் (1882-1965) - அடிப்படையில் சமூகப்பணியாளராக, ஹல் ஹவுஸ் சமுதாய ஊழியரகத்தில் தொண்டராக இருந்த இவர், ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தபோது அவரது அமைச்சரைவையில் முதல் பெண் அமைச்சராக, தொழிலாளர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பொருளாதார மந்தத்திலிருந்தும், இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்தும் அமெரிக்கா மீண்டெழ இவரின் செயல்பாடுகள் உதவின. பல்வேறு வகையான சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்த சட்டங்கள் மற்றும் வேலையின்மை இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைக்கு வர இவர் முக்கியக் காரணமாயிருந்தார்.
English
The first woman to serve as a U.S. cabinet member, Perkins was President Franklin D. Roosevelt's Secretary of Labor during the Great Depression and World War II. Using her social work background, she promoted and helped develop the social security system, child labor legislation, and unemployment compensation.