permanency planning

நிரந்தரமாக்கலுக்கான திட்டமிடல் / பொன்றாத் துணைக்குத் திட்டமிடல், ஸ்திரமாயிருக்கத் திட்டமிடல்

தமிழ் விளக்கம்

ஆதரவற்ற ஒரு குழந்தையைத் தற்காலிக வளர்ப்பிடங்களில் வைத்துப் பராமரிக்கும் முறைக்கு மாறாக, அந்தக் குழந்தைக்கு நீண்டகால கவனிப்பும், பராமரிப்பும் செய்துகொடுக்க முறையாகச் செய்யும் முயற்சிகளை நிரந்தரமாக்கலுக்கான திட்டமிடல் எனலாம். இதை அந்தக் குழந்தைகளின் சொந்தக் குடும்பங்களே, அக்குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவு வலுப்படுத்துவதன் மூலமோ, அல்லது அந்தக் குழந்தையை வளர்க்குமிடங்களிலே, தெளிவான வரையறைகளுடன் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை வளர்ப்பேற்பு பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி செய்வதன் மூலமோ அடையலாம். நிரந்தரமாக்கலுக்கான திட்டமிடல் என்பது, குழந்தைகளை அவர்களின் பிறப்புக் குடும்பத்திலிருந்து பிரிக்காதிருப்பதையும், அப்படிப் பிரிக்கப்பட்டிருப்பின் குடும்பத்தோடு சேர்த்து வைத்தலையும், வெளியிடங்களில் இருக்கவைக்க வேண்டுமென்ற பட்சத்தில், பிறப்புக் குடும்பத்தைப் போன்ற குறைந்த கட்டுப்பாடுகளுள்ள குடும்பத்தில் வளரவிடுவதும், பிறப்புக் குடும்பத்தின் அருகிலுள்ள குடும்பங்களில் வளரவிடுவதும், அக்குழந்தையின் தேவைகள் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் பொருத்தமான இடங்களில் வளரவிடுவதும், நிரந்தரமாக்கலுக்கான வழிமுறைகள் என்று 1980 ஆம் ஆண்டைய தத்தெடுப்பு உதவி மற்றும் குழந்தைகள் நலச் சட்டம் வரையறை செய்துள்ளது.

English

In child welfare work, a systematic effort to provide longterm continuity in dependent children's care as an alternative to temporary foster placements. This might be done by facilitating adoption, by establishing clear guidelines for remaining in foster care, or by helping the children's natural families become capable of meeting the children's needs. The Adoption Assistance and Child Welfare Act of 1980 (P.L. 96-272) indicated that permanency planning goals include efforts to prevent out-of-home placements whenever possible; promote family restoration; and implement such placement guidelines as placement in the leastrestrictive (most family-like) setting available, in close proximity to the parents' homes, and consistent with the child's best interests and special needs.