persecutory-type delusional disorder

துன்புறு வகையான திரிபுணர்ச்சிகள், அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டதாக மனப் பிராந்தி, விடாத்துயரளிப்பு, தான் துன்புறுத்தப்படுவதாக / கொடுமைக்குள்ளாக்கப்படுவதாக / தன்னை ஒழித்துக்கட்ட நினைப்பதாக சந்தேகப்படும் எண்ண மயக்கம், கொடுமை மயக்கம்

தமிழ் விளக்கம்

துன்பப்படுத்தப்படுவதாக / புண்படுத்தப்படுவதாக எண்ணமயக்கம், தன்னைத் தீர்த்துக்கட்ட சதியாலோசனை நடப்பதாகவும், தன்னை யாரோ பின்தொடர்வதாகவும், தன்னுடைய நடவடிக்கைகள் வேவுபார்க்கப்படுவதாகவும், தன்னுடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயல்வதாகவும் மிக இயல்பாக எண்ணும் மனமருட்சி. தனக்கு எதிராக அநீதி நடக்கிறது என்ற உளத்திரிபிற்கு உள்ளானவார்கள், அதை எதிர்கொள்ள அல்லது சமாளிக்க மேலதிகாரிகளிடம் முறையிடுவதும், சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதும் அல்லது வன்முறையில் ஈடுபடுவதும் இந்தக் கோளாறின் விளைவுகளாகும்.

English

A subtype of delusional disorder characterized by nonbizarre delusions, particularly an intense belief that one is being plotted against, harmed, spied on, followed, or obstructed. The person focuses on an imagined injustice and often seeks remedy through appeals to authorities, legal action, or threatening and violent behavior.