person-in-environment perspective
மானுடச் சூழல் கண்ணோட்டம், சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம்
தமிழ் விளக்கம்
சுற்றுச் சூழல் பற்றிய பார்வை சமூகப்பணியின் ஒரு முக்கிய சார்பு நிலையாகும். இது மனிதர்களையும் அவர்களைச் சுற்றியுள்ள சூழலையும், இரண்டிற்குமிடையே ஏற்படும் தொடர்புகளையும், ஒன்றின் மீது பிறிதொன்று ஏற்படுத்தும் தாக்கங்களையும் புரிந்துகொள்ள வலியுறுத்துகின்றது. இது மனிதர்களுக்கும், சூழலுக்கும் இடையேயான ஒத்திசைவு, பரிமாற்றம், ஏற்றெதிர்மை (சரி எதிரீட்டுமுறை reciprocity), அன்னியோன்னியம் (பரஸ்பரம்) போன்ற கருத்தாக்கங்களைக் கொண்ட கருத்துநிலை. சமூகப்பணியாளர்கள் பெரும்பாலும் தனியொன்றையும் (நபர், குழு, குடும்பம்,சமுதாயம்) அதன் சூழலையும் புரிந்துகொண்டே தங்களின் தீர்வு முறைகளைப் பரிந்துரைப்பர். இதைச் சுற்றுச் சூழல் பற்றிய பரப்பார்வை என்றும் கொள்ளலாம். ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பற்றி முழுமையாக அறிய உதவும் கோட்பாடு. இது சிகிச்சை முறையல்ல. மாறாக ஒன்றிற்கு ஒன்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் அதன் உட்சிக்கல்களையும் புரிய உதவி, பிரச்சனையைத் தீர்க்கப் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வழிவகுக்கும். இது தனி மனிதருக்கு உதவும் அதே நேரத்தில், மனிதப் பிரச்சனைகளை, சூழ்நிலை மாற்றத்தின் மூலம், அல்லது ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம், பெருவாரியான மக்களை பிரச்சனையிலிருந்து மீட்க முடியும் என்ற அணுகுமுறையையும் முன்வைக்கின்றது. இதை ஒரு சமூகத்தின் பல்வேறு உட்கூறுகள், தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள், நிறுவனங்கள், சிறு சமூகங்கள் செயல்பட ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன, அவைகள் ஒத்திசைந்து செயல்படவும், சமநிலை காக்கவும் என்னமாதிரியான கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்கின்றன என்பதை விளக்கிச் சொல்லும் அமைப்புக் கோட்பாட்டுடன் பொருத்திப்பார்க்கலாம். Its dual focus on both individual assistance and social reform.
English
This is an orientation among social workers and other professionals that views the client as part of an environmental system. This perspective encompasses the reciprocal relationships and other influences between an individual, the relevant other or others, and the physical and social environment.