Person-in-Environment (PIE) System

மானுடச் சூழல் கண்ணோட்டம், சுற்றுச் சூழலைப் பற்றிய கண்ணோட்டம், மானுடச் சுற்றாடல் தொகுப்பு

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அல்லது பொதுவாக மனிதர்கள் சக மனிதர்களுடன் சமூகத்தில் செயல்படும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அதை வகைப்படுத்தி விளக்கவும் சமூகப்பணியாளர்கள் கையாளும் ஒரு அறிதல் முறை. இந்த முறையை, தங்களிடம் வரும் முழாள்களின் (வயதிற்கு வந்தவர்கள் - adult) சமூகச் செயல்பாடுகள் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் முறையாகச் சேகரிக்கவும் அதனடிப்படியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மதிப்பீடு செய்யவும் சமூகப்பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தங்களுடைய மனிதர்களின் சுற்றாடல் என்ற புத்தகத்தில் சமூகப்பணியாளர்களான ஜேம்ஸ் எம் கார்ல்ஸ் மற்றும் காரின் ஈ வன்றே (James M. Karls & Karin E. Wandrei) கூறுகிறார்கள். இந்த முறையைக் கையாள்வதன் மூலம், சமூகப்பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அப்பிரச்சனைகள் உருவாகக் காரணமாயிருக்கும் பல்வேறு கூறுகளை அறிந்து, அதற்கேற்றபடி பிரச்சனைகளைத் தீர்க்கவோ குறைக்கவோ உதவுகிற சிகிச்சை முறைகளைக் கையாள முடியும். மானுடச் சுற்றாடல் தொகுப்பு ஒரு வாடிக்கையாளரை நான்கு பரிமாணங்களில் புரிந்து கொள்ள உபயோகப்படுகிறது. 1. சமூகச் செயல்பாடு தொடர்புடைய பிரச்சனை (குடும்பச் செயல்பாடு, பிறருடனான செயல்பாடு, பணியிடச் செயல்பாடு, வாழ்வின் முக்கிய கட்டங்களில் செயல்படும் முறை) 2. சமூகச் சூழல் (அடிப்படை மற்றும் பொருளாதாரத் தேவை, கல்வி, சட்ட, ஆரோக்கியம், பாதுகாப்பு, சமூக சேவை, தன்னார்வம் மற்றும் பரஸ்பர நேச விளைவுகள்) 3. உளச் சீர்கேடு (மன நோய்களைக் கண்டறிய உதவும் புள்ளி விபரக் கையேடு IV குறிக்கப்பட்ட நோய்கள் (Axes I and II) 4. உடல் ஆரோக்கியப் பிரச்சனைகள் (நோய்களுக்கான சர்வதேச வகைப்பாடு 10 ல் குறிக்கப்பட்ட நோய்கள்). இந்த நான்கு பரிமானங்களும் மூன்று கோணத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றது 1. எவ்வளவு காலமாக இப்பிரச்சனை தொடர்கிறது 2. இப்பிரச்சனைகளை வாடிக்கையாளர் எப்படிக் கையாண்டு வந்திருக்கின்றார் 3. இதில் சமூகப்பணியாளர் தலையீடு (intervention உதவி) எந்த அளவிற்குத் தேவைப்படுகிறது. நான்கு பிரச்சனைக்கூறுகளையும், மூன்று விதமான கோணத்தில் வைத்துப் பரிசீலனை செய்வதன் மூலம் சமூகப்பணியாளர்கள் தங்கள் வாடிக்கையாளருக்குச் சிறந்த முறையில் சேவையளிக்க முடியும்.

English

A tool social workers use to describe and classify problems of social functioning. The system is used for the systematic collection of relevant information that can produce a comprehensive assessment of the social- functioning problems adult clients bring to social workers (James M. Karls and Karin E. Wandrei, [Eds.] Person-inEnvironment System, Washington, DC: NASW Press, 1994). The system also helps the worker draw conclusions about the interrelated factors contributing to the client's problem and select interventions that might relieve or solve problems. PIE calls for a description of the client based on four factors: Factor I— Social-functioning problems (including four categories of social role problems: family, other interpersonal, occupational, and special life situation roles); Factor II-Environmental problems (including economic–basic needs, educational, legal, health, safety and social service, voluntary association and affectional support systems); Factor III-Mental disorders, based on parts of the DSM-IV, Axes I and II; and Factor IV-Physical health problems based on the International Classification of Diseases (ICD-10). Three indices are also used. The degree to which these problems require social work intervention is rated in a severity index. The length and recency of the client's problem is rated in the duration index. The coping index is a rating of the client's resources for dealing with the problem.