person-oriented record

நபர் சார்ந்த பதிவுக்குறிப்பு / நபர் சார்ந்த பதிவேடு

தமிழ் விளக்கம்

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களைப் பற்றிய பிரத்யேக விவரங்கள், அவருடைய பிரச்சனைகள், அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பதிந்து வைக்க சமூகப்பணியாளர்களும், சேவை நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட வடிவில் பின்பற்றும் பதிவு நடைமுறை. இது மருத்துவர்கள் பின்பற்றும் நோயாளிகளின் பதிவேடுகளைப் போன்றதாகும். இதில் பிரச்சனையின் / நோயின் தன்மை, பிரச்சனையறிதல் / நோயறிதல், வழங்கப்பட்ட சிகிச்சை, சிகிச்சையில் கண்டறிந்த ஆறு வாரத்திற்கு ஒருமுறையோ 12 வாரத்திற்கு ஒருமுறையோ ஏற்பட்ட முன்னேற்றம் போன்ற தகவல்கள் பதியப்படும்.

English

A format used by some social workers and some social agencies to keep specific, accountable, and goal-directed records of the intervention process for each client. An adaptation of the physician's problem-oriented record (FOR), the person-oriented record contains an initial database, treatment plan assessment, progress notes, and the progress review (to evaluate a client's progress over a specified time such as every six or 12 weeks).