person-situation configuration

மனிதர்களும் அவர்களின் சந்தர்ப்ப சூழல் கட்டமைப்பும்

தமிழ் விளக்கம்

பிரச்சனையுள்ள நபர், அந்தப் பிரச்சனை உருவான சூழல், அந்த மனிதருக்கும், சூழலுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு என்ற முப்பரிமாணக் கோணத்தில் வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ள சமூகத் தனிப்பணியாளர்கள் பின்பற்றும் நடைமுறைக்கோட்பாடு.. ஒரு நபருக்கும் அவரின் சூழலுக்கும் இடையே ஏற்படும் தொடர்பு அவருடைய உள்ளார்ந்த மனக்குழப்பத்தாலோ அல்லது சிலவற்றிற்கு அவர் எதிர்வினையாற்றிய முறையாலோ அல்லது சூழல் தந்த நெருக்கடியாலோ அமையலாம் என்ற கருத்து.

English

The con- cept used in social casework pertaining to the threefold interrelationship consisting of the person with the problem, the situation in which the problem exists, and the interaction between them. The interaction is influenced by internal conflicts or reactions and environmental pressures.