personal unconscious
அந்தரங்கம் சார்ந்த நனவிலி மனம், தனிமனிதப் பிரக்ஞையின்மை
தமிழ் விளக்கம்
மனித மனம் பிரக்ஞையாலும், பிரக்ஞையின்மையாலும் கட்டமைக்கப்பட்டது. கார்ல் யுங்க் என்ற உளவியலாளரின் கோட்பாட்டின்படி, பிரக்ஞையின்மை இரு வகையானது 1. அந்தரங்கம் சார்ந்த பிரக்ஞையின்மை 2. சமூகத்தின் ஆழ்மனம், சமூகத்தின் பொதுப்புத்தி, பொது நனவிலி நிலை. அந்தரங்க ஆழ்மனம் மனிதர்களின் விழிப்பு நிலையால் உருவானதல்ல. அது சூழ்நிலையாலும், அனுபவங்களாலும், இச்சைகளாலும் ஆனது. பொதுப்புத்தி, பொது நனவிலி நிலை என்பது ஒரு குறிப்பிட்ட வகையான தூண்டல்களுக்கு ஒரு குழுவோ அல்லது சமூகமோ ஒரே மாதிரியாக எதிர்வினை ஆற்றும் பாங்கு. ஒவ்வொரு மனிதரிடத்திலும் அவர் அந்தரங்கம் சார்ந்த நனவிலி (unconscious) மனம் இருப்பது மாதிரி, சமூகத்தின் பொதுப்புத்தியும் உறைந்து வெளிப்படாநிலையில் இருக்கும். இது வெளிப்படுத்தப்படலாகாது என்று அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்களல்ல. மாறாக நம்பிக்கைகள், விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கல்விப் பயிற்சியால் அடையப்பெற்ற பண்பாட்டுபேறு போன்றவைகளைக் குறிக்கும்.
English
In Jungian theory, one of two parts of the unconscious (the other part being the collective unconscious). The personal unconscious is the region of the mind that is not subject to the individual's immediate awareness but that is developed through the individual's unique experiences, drives, and circumstances.