personality

ஆளுமை

தமிழ் விளக்கம்

ஆளுமை என்ற சொல் ஆள் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. மெய்யியலிலும், மருத்துவத்திலும் ஒரு குறித்த வகையில் சிந்திக்கும் வல்லமை கொண்ட மனித இனத்தைச் சார்ந்த ஒருவரே 'ஆள்' என்னும் சொல்லால் குறிக்கப்படுவர். ஆளுமை என்பதை ஒரு ஆளின் தன்மை எனலாம். ஒரு மனிதரின் தனித் தன்மை, ஒருவரை அவர் நிலையில் இருக்கச் செய்யும் பண்புகளையே ஆளுமை என்ற சொல்லால் குறிக்கின்றனர். ஆளுமை என்பது என்ன என்பது பற்றி அறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. இருப்பினும் உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரணை, நடத்தைகள், உணர்வுகள், மற்றும் சிந்தனைகளையும் குறிக்கிறது. பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கிறது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக 'ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று' என வரையறுக்கலாம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைகின்ற ஒன்றாகவும் உள்ளது.

English

An individual's entire intellectual and emotional structure including abilities, attitudes, interests, and enduring patterns of understanding and relating to the environment.