personality change
ஆளுமை மாற்றம்
தமிழ் விளக்கம்
ஒருவர் கடந்த காலத்தில் நடந்துகொண்ட விதம், சிந்தனைப் போக்கு, மற்றவருடன் கொண்டிருந்த தொடர்பு முறைகளிலிருந்து மன அல்ல்து உடல்ரீதியான பிரச்சனைகளால் குறிப்பிடத்தக்க அளவில் மாறியிருக்கும் நிலை. உணர்வுகளில் நிலையின்மை, இங்கிதமற்ற நடத்தை (disinhibition), முரட்டுத்தனமாக, மூர்க்கமான நடத்தை அல்லது பிறர் பார்த்து பரிதாபப்படக்கூடிய நடத்தை, பிறர் மீது சந்தேகம் அல்லது அவநம்பிக்கை கொள்ளல் போன்றவை ஆளுமை மாற்றத்தின் பொதுவான அறிகுறிகளாகும். ஆளுமை மாற்றம் என்பதை உளவியல் சிகிச்சை முறையில் பயன்படுத்தும் போது, ஏற்பட்ட மாற்றங்களையும் அதற்கான உளவியல் மற்றும் உடல் ரீதியான காரணங்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் போன்றவற்றையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
English
A significant devia- tion from one's previously characteristic pattern of behavior, thinking, and commu- nicating, usually symptomatic of an under- lying mental or physical problem. Among the more common changes are increased emotional lability, disinhibition, aggressive or apathetic behaviors, and paranoid behaviors. When using this term as a formal diagnosis, the clinician must indicate the predominating behavioral change and the general medical condition thought to underlie the change.