personality disorders
ஆளுமைக் கோளாறு
தமிழ் விளக்கம்
ஆளுமைக்கோளாறு என்பது, ஒருவருக்கு மற்றவர்களோடும், சூழ்நிலையோடும் தொடர்பு கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் ஏற்படும் இணக்கமின்மையால் ஏற்படும் செயழிலந்த நிலை. இந்த ஆளுமைச் சிக்கல்கள் அதன் காரணம் மற்றும் விளைவுகளைக் கொண்டு பதினோரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன 1. சந்தேக ஆளுமை (Paranoid personality disorder) , 2. மனப்பிளவு ஆளுமை (Schizoid personality disorder), 3. மிகு மனப்பிளவு ஆளுமை (Schizotypal personality disorder), 4. சமூகவிரோத ஆளுமை (Antisocial personality disorder), 5. ஸ்திரமற்ற ஆளுமை (Borderline personality disorder), 6. நாடகப்பங்கான ஆளுமை (Histrionic personality disorder), 7. தற்பூசனை(தற்காதல்) ஆளுமை (Narcissistic personality disorder), 8. தவிர்க்கும் ஆளுமை (Avoidant personality disorder), 9. சார்ந்திருக்கும் ஆளுமை (Dependent personality disorder), 10. அலைபாயும் ஆளுமை (Obsessive-compulsive personality disorder), 11. நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம் (Personality change due to another medical condition), 12. மேற்சொன்ன எந்த வகையிலும் சேராத ஆளுமை (Personality disorder not otherwise specified).
2.ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்பது, சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பில் இருந்து விலகி நடந்துகொள்ளும் நடத்தைகளின் தொகுப்பாகும். ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறிமுறைகள் பெரிதும் தற்சார்பு (subjective) கொண்டவையாக உள்ளன. எனினும் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோலங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. வளைந்து கொடாத; தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன 'நிலைத்த மனக்கண் வடிவம்' (fixed fantasies) அல்லது 'செயற்பிறழ்வு மனக்கண் நோக்கு' (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமைந்த நம்பிக்கை முறைமைகளினால் உருவாவதாகக் கருதப்படுகின்றது. 'ஆளுமைச் சிதைவு என்பது ஒருவர் சார்ந்த பண்பாட்டினரின் எதிர்பார்ப்புக்குக் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டு, தொடர்ந்திருக்கும் அக அனுபவம் மற்றும் நடத்தைக் கோலம் ஆகும்' என்று அமெரிக்க உளநோய் மருத்துவக் கழகம் ஆளுமைச் சிதைவு என்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.

English
Patterns of relating to and understanding others that are so maladaptive, inflexible, and deeply ingrained that they produce significant social impairment. Personality disorders are usually recognizable in one's adolescence. There are 11 major types of personality disorder: (1) paranoid personality disorder, (2) schizoid personality disorder, (3) schizotypal personality disorder, (4) histrionic personality disorder, (5) narcissistic personality disorder, (6) antisocial personality disorder, (7) borderline personality disorder, (8) avoidant personality disorder, (9) dependent personality disorder, (10) obsessive- compulsive personality disorder, and (11) the atypical personality disorder.