personality inventory

ஆளுமை விவரப்பட்டியல், ஆளுமைச் சோதனையில் தெரியவந்த குணங்களின் குறிப்பு

தமிழ் விளக்கம்

ஆளுமையை அளவிடுவதெற்கென பிரத்தேயகமாகத் தயாரிக்கப்பட்டு, தரப்படுத்தப்ப்ட்ட (standardized series of questions) கேள்வித்தாளின் மூலம் பதில்களைப் பெற்றோ அல்லது சில செயல்களைச் செய்ய வைத்து (tasks) அதை மதிப்பிடுவதன் மூலமோ, ஒருவரின் எண்ணங்களையும், மனோபாவத்தையும் நடத்தைகளையும், விளக்க முயற்சிப்பது. இச்சோதனை மூலம் ஒருவரின் பலம், பலஹீனம், மனக்குழப்பம் மற்றும் உளநோய்களை அறிந்துகொள்ளலாம். ஆளுமை விவரப்பட்டியல் இரண்டு வகைகளானது.
1. சுய அறிக்கைப் பட்டியல் (Self-report inventories) - இதில் கேட்கப்படும் கேள்விப் பட்டியலில் இருந்து எது எதுவெல்லாம் தனக்குப் பொருத்தமானது என்று தேர்வு செய்ய வேண்டும். இதில் 1.மினசோட்டா பலநிலை ஆளுமை விவரப்பட்டியல் (Minnesota Multi phasic Personality Inventory (MMPI) 2. 16 வகை ஆளுமைப்பட்டியல் (16 Personality Factor Questionnaire) 3. கலிபோர்னியா ஆளுமைப்பட்டியல் (California Personality Inventory Common Inventories). இதில் 1. கோப அளவுச் சோதனை (Anger Test), 2. மன அழுத்த / இறுக்கச் சோதனை (Stress Test), 3. உளவழி நரம்பு நோய்ச் சோதனை (Neurotic Test) ஆகியவை உள்ளடங்கும். 4. ஆளுமை வகைப்பாடுச் சோதனை (Personality Type Test), 5. நினைவுத் திறன் சோதனை (Memory Test), 6. புதியதை ஏற்றுக்கொள்ளும் மனப் பரிசோதனை (Openness to Experience Personality Test), 7. ஏற்றுக்கொள்ளும் சோதனை (Agreeable Test), 8. மனச்சான்றுச் சோதனை (Conscientious Test), 9. புறநோக்குச் சோதனை (Extrovert Test), 10. ஐந்து ஆளுமை வகைச் சோதனை (Five Factor Test) என்று பலவகைகளுண்டு.
2. ஆழ்மன வெளிப்பாடுச் சோதனை - இதில் தெளிவற்ற காட்சியையோ அல்லது நிகழ்வையோ சொல்லி அதன் மீதான கருத்தறிவது. ரோசார்சின் மைத்தடச் சோதனை, மையோற்றுச்சோதனை (Rorschach Inkblot Test) மற்றும் ஒன்றைப் பிறிதோன்றோடு பொருத்திப்பார்க்கும் (Thematic Apperception Test (TAT) சோதனை ஆகியவையாகும்.

English

A psychological test, usually using a questionnaire, in which the subject answers personal questions to reveal characteristics and individual behav- iors and sometimes deriving diagnoses. The individual's scores are often compared to norms based on the responses by many others who have taken the same tests. The most widely recognized of these tests is the Minnesota Multiphasic Personality Inventory (MMPI).