pertussis
கக்குவான் இருமல்
தமிழ் விளக்கம்
நுரையீரலில் ஏற்படும் கடுமையான நுண்ணுயிர் தொற்று நோயே கக்குவான் இருமல் ஆகும். அடக்கமுடியாத கடுமையான இருமலால் மூச்சுமுட்டு உண்டாகும். பலமுறை தொடர்ந்து இருமும்போது, இழுத்து மூச்சு விட நேர்வதால் இழுப்பொலி உண்டாகிறது. இது பெரும்பாலும் பிறந்த மற்றும் இளம்பிள்ளைகளைத் தாக்குகிறது. குறிப்பாக ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது ஆபத்தானது. போர்டெட்டெல்லா பெர்ட்டியூசிஸ் என்ற பாக்டீரியாவால் கக்குவான் இருமல் உண்டாகிறது. காற்றுப் பாதையின் உட்சுவரை பாக்டீரியா / நுண்ணுயிரிகள் பாதிக்கின்றன. நுரையீரலில் இருந்து பிரியும் இருபெரும் மூச்சுக் குழாய்களிலும், மூச்சுக் குழலிலும் தொற்றேறி நோயறிகுறிகள் வெளிப்பட, ஆறில் இருந்து இருபது நாட்கள் ஆகின்றன. இது நோயரும்பும் காலம் எனப்படும். கக்குவான இருமலின் முக்கிய அறிகுறிகள் திடீரென்று ஏற்படும் அடக்கமுடியாத இருமல், மூச்சிழுப்போசை, இருமலுக்குப்பின் வாந்தி,. கக்குவான் இருமலின் பிற அறிகுறிகளில் அடங்குவன: மூக்கொழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தும்மல், கண்களில் நீரொழுகுதல், உலர்ந்த, உறுத்தும் இருமல், தொண்டை வலி, உடல்சூடு அதிகரித்தல்.
சிகிச்சை: தொற்றேறி முதல் மூன்று வாரத்துக்குள் (21 நாட்கள்) கக்குவான் இருமல் கண்டறியப்பட்டால் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கொடுக்கலாம். அதிகமான அளவுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் நீர்ச்சத்துக் குறைவதைத் தடுக்க ஏராளமான நீராகாரம் பருகவேண்டும். இருமும்போது வெளிப்படும் அதிகப்படியான சளியையும் வாந்தியையும் உடனுக்குடன் அகற்ற வேண்டும் இல்லையேல் இவை உள்ளிழுக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படநேரிடும்.
தடுப்பு முறை: 6, 10, 14 மாதங்களில் மூன்று தடவைகளாகவும், 16-24 மாதங்களிலும் 5-6 வயதிலும் செயலூக்கியாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்தே கக்குவான் இருமலுக்கு உரிய தடுப்பு முறையாகும்.

English
A highly communicable infectious disease, popularly known as whooping cough, occurring predominantly in young children. The person develops respiratory difficulty and eventually begins coughing rapidly. This causes the individual to gasp for air, during which a high-pitched, whooping sound occurs. In most developed nations pertussis has been controlled to a great extent by immuniza- tion during infancy.