pervasive developmental disorders
தாமத விருத்திக் கோளாறு, விரும்பத்தகாத / பரவலாகக் காணப்படும் வளர்ச்சிச் சீர்கேடுகள்
தமிழ் விளக்கம்
ஒருவர் பருவமடையுமுன்பே ஆரம்பித்து சிறிது சிறிதாகப் பரவும் இயல்புள்ள உடல் மற்றும் மனச் சீர்கேடுகள். இது சமூகத் தொடர்பு திறன்களைப் பாதித்து, மாற்றமுடியாத, அலுப்பு தட்டுகிற வகையில் நடந்துகொள்ளவும், சிலவற்றில் ஆர்வம் கொள்ளவும் வைக்கும். இந்த வளர்ச்சிச் சீர்கேடுகளில் முக்கியமானவை. 1. ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்கம், புற உலகச் சிந்தனைக் குறைபாடு, ஒருவகையான நரம்புக்கோளாறினால் ஏற்படும் மன இறுக்கம், சமூகத் தொடர்பு சீர்குலைவு (autistic disorder), 2. ரெட்ஸ் சீர்கேடு (Rett's disorder) 3. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பழக்க வழக்கங்கள், தகவமைப்பு திறன்கள், தன்மைய சீர்கேடுகள் (childhood disintegrative disorder), மற்றும் 4. செய்ததே செய்வதாலும், கூறியதையே கூறுவதாலும் சமூகத் தொடர்புகளில் சிக்கல் ஏற்படுத்தும் சீர்கேடு (Asperger's disorder) போன்றவை முக்கியமானதாகும். இந்தச் சீர்கேடுகளை நிறப்பிரிகை வகை கோளாறு என்கிறார்கள். இந்த நோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ அல்லது ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை பிறந்து இயல்பான வளர்ச்சியை அடைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவு. 2 வயது தொடங்கி 10 வயதிற்குள் ஒரு குழந்தை தான் பெற்ற திறன்களையெல்லாம் (பேசுவதில், பழகுவதில், பிறருடன் ஒத்துப்போவதில்) படிப்படியாக இழந்து, அந்த திறணிழப்பே வாழ்நாள் முழுதும் நீடிப்பது.
English
A classification of physical and mental dysfunctions that appear before the individual reaches maturity and are characterized by severe and inclusive impairment in such areas as communication and social interaction skills or by the presence of stereotyped behavior, interest, and activities. Pervasive development disorders include autistic disorder, Rett's disorder, childhood disintegrative disorder, and Asperger's disorder.