phase-of-life problem
வாழ்க்கைப் பருவ பிரச்சனைகள்
தமிழ் விளக்கம்
மனித வாழ்க்கையில் இயல்பாக ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு மாறும் நிலை. இந்த மாற்றம் புதுப் பொறுப்புகளையோ, முற்றிலும் அறிமுகமில்லாத சூழ்நிலையையோ அல்லது மனிதர்களையோ கையாளும் நிலைக்குக் கொண்டு சென்று, அதைச் சமாளிக்கப் புது திறன்களை உபயோகிக்கத் தூண்டும். எடுத்துக்காட்டாக பள்ளிக்குச் செல்லல், திருமணமாதல், முதல் குழந்தையைப் பெறுதல், பணியிலிருந்து ஓய்வு பெறுதல் போன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம். இதற்கு மாறானது ஒரு மனிதனின் வாழ்க்கைப் பருவத்தில் நடக்கும் இயல்புக்கு மாறான நிகழ்ச்சிகள். ஒரு வாழ்க்கைப் பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு மாறும் போது அது சடங்குகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு மாற்றம் அங்கீகரிக்கப்படுகிறது. மாறாக இயல்புக்கு மாறான நிகழ்ச்சிகளில் கொண்டாட்டத்திற்கு உரிய சடங்கு முறைகள் இருப்பதில்லை. இந்த நிகழ்வுகளை மிகவும் விசித்திரமான சடங்குகளுடன், சிரமத்துடனே சமாளிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக எதிர்பாராத மரணம், எதிர்பார்த்த மரண சூழ்நிலையிலிருந்து மாறுபட்டது. பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தையை எதிர்கொள்ளும் விதம், சிறைத்தண்டனைக்கு உள்ளாவது, ஓரினத் திருமணம் மற்றும் அதையொட்டிய சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் இயல்புக்கு மாறானது என்று கருதப்படுகிறது. இயல்புக்கு மாறான வாழக்கைப் பருவங்கள் பெரும்பாலோனோருக்கு பிரச்சனைகளைத் தருகிறது.
English
A normative transition in the life cycle that requires the individual to use coping skills to adapt to unfamiliar but virtually inevitable circumstances. Examples include entering school, getting married, having a first child, and retiring. See idiosyncratic life-cycle transitions.