philanthropy

மனித நேயம், மாந்த நேயம், அருளுடைமை, லோகோபகாரம், ஒப்புரவு, பரோபகாரம், ஜனோபகாரம், தானம் வழங்குதல், கொடையாண்மை

தமிழ் விளக்கம்

மனித நேயம் என்பது 'மனித இனநலக் கோட்பாடு', 'மனிதப் பொதுமைநல இயல்', என்றும் பொருள்படும். சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். கடவுள் நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ இல்லாமல் மனித இனம் அறநெறிகளையும், நன்நெறிகளையும் கிரகிக்கும் தன்மை மனிதர்களுக்கு உண்டென்று அறிவியலார் நம்புகின்றனர். மேலும் அவர்கள், மனித நேயம் என்பது அறிவியலும; அறிவார்வமும் சேர்ந்த உண்மைத் தேடலாகும் என்றும் கூறுகின்றனர். இதனால்தான் சமயஞ் சாராத மனித நேயம் (Secular Humanism ) என்ற சொற்பதமும் வழக்கிற்கு வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் மனித நேயச் செயல்பாடுகள் முறைப்படுத்தப்படாமல் இருந்தது, சமூகப்பணி அறிவியல் துறையாக உருவானபின்பு, சக மனிதர்களுக்கு உதவுவதென்பது முறைப்படுத்தப்பட்டு, உதவி செய்ய நினைப்போருக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் மனநிறைவு அளிக்கும்படியாக மாறியது. இன்று மனித நேய உதவிகளுக்கான ஆதரவைப் பெறுவதற்கும், உதவியை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் சர்வதேச அளவில், தேசிய அளவில், வட்டார அளவில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

English

A term derived from the Greek, meaning "love of humanity," that has come to refer to practical efforts to promote the public welfare by donating funds or resources to worthy causes. Philanthropic activity, especially in the secular community, was rather spontaneous and haphazard until the late 19th century. The field of social work was born, in part, as an effort to make these activities more systematic and effective in their raising and distributing funds. Today, philanthropy constitutes a sophisticated and highly complex number of organizations and groups. See also alms and charity.