phobia
அச்ச நோய், அருவெறுப்பு, வெறுப்பச்சம், கிலி, பீதி, மருட்சி, ஒரு பொருளின் மீது பயம் அல்லது வெறுப்பு
தமிழ் விளக்கம்
பயம், பீதி, திகில் என்பது ஒரு பொருள் அல்லது சம்பவத்தின் மீது உக்கிரமாக தொடர்ந்து ஏற்படும் பாதுகாப்பற்ற உள உணர்வாகும். பயத்தின் அறிகுறிகளாக மிகு வியர்வை, மிகை இதயத் துடிப்பு, சீரற்ற சுவாசம் வேகமாக போன்றவற்றைச் சொல்லலாம். பயம் என்பது ஒருவரின் உள்ளார்ந்த மனக்குழப்பம் அதிகமாகும் போது, அதைச் சமாளிக்கவும், முடிந்தால் அதிலிருந்து விலகித் தப்பிக்க, வெளியிலுள்ள பொருட்கள் மற்றும் சம்பவங்களின் மீது இடம்பெயரச் செய்யும் உளச் செயல் என்று உளவியலாளர்கள் கருதுகிறார்கள். பயத்தில், பயம் தருபவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ அல்லது அதைத் தவிர்க்கவோ மனிதர்கள் முயல்கிறார்கள். பயம் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு எதிர்மறைத் தூண்டல்களால் உருவாவது என்று நடத்தையியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பயம் மனக்கலக்கதிலிருந்து வேறுபட்டது. காரணம், மனக்கலக்கம் என்பது வெளிப்புற அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல் ஏற்படக்கூடியதாகும். ஆகையால், மனக்கலக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாத அல்லது தவிர்க்க முடியாத ஒன்றாக உணரக்கூடிய அச்சுறுத்தல்களின் விளைவாக ஏற்படுகிறது. பயம் என்பது மோசமான சூழல் அல்லது ஏற்கமுடியாது தொடரும் சூழல் போன்ற பெரும்பாலும் வருங்கால நிகழ்வுகளை எண்ணியே ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயமானது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விசயத்திற்கான உடனடி சலனமாகவே அமைகிறது. கண்களை விரித்துக்காட்டுவது (அடுத்து என்ன நடக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்கும் நிலை), கண்கள் உறைந்து விரிவது, (அதிக வெளிச்சத்தை கண்கள் உள்வாங்குவது), மேலுதடு உயர்வது, கண் இமைகள் சுருங்குவது மற்றும் உதடுகள் கிடைமட்டமாக விரிவடைவது உள்ளிட்ட முக பாவனைகள் பயத்தினால் ஏற்படுகின்றன. பயத்தின்போது இயக்க தசைகள் விறைப்பாகி, இதயத் துடிப்பும் அதிகரிகிறது. பயத்தின் அளவுகள் ஒரே மாதிரி இருப்பதில்லை மிதமான எச்சரிக்கை முதல் கடுமையான அச்சக் கோளாறு மற்றும் துன்புறு மனநோய் வரை இது மாறுபடுகின்றது. கவலை, மனக்கலக்கம், நடுக்கம், திகில், பீதி மற்றும் அதீத அச்சம் உள்ளிட்ட கூடுதலான புலன் உணர்வு சார்ந்த மற்றும் உணர்ச்சிவயப்பட்ட நிலைகளைச் சார்ந்து பயம் பல்வேறு விதமாக உணரப்படுகிறது. பயத்தைப் பற்றிய ஆய்விலிருந்து, சிலந்திகள், பாம்புகள், உயர்வான இடங்கள், நீர், சுற்றுச்சுவருடனான இடங்கள், சுரங்க வழிகள் மற்றும் பாலங்கள், சமுதாயப் புறக்கணிப்பு, தோல்வி மற்றும் வதந்தி போன்ற விசயங்கள் பயத்தை உண்டாக்குபவைகளாக அறியப்பட்டுள்ளன. 2005 ஆண்டு நடத்தப்பட்ட பயத்தைப் பற்றிய ஆய்வில் அமெரிக்க இளைஞர்கள், தீவிரவாதமே அதிக பயத்தை ஏற்படுத்துவதாக கூறினர் (8%). அதில் பத்து பயங்கள் வரிசை முறையில் குறிக்கப்பட்டன தீவிரவாதத் தாக்குதல்கள், சிலந்திகள், இறப்பு, தோல்வி, போர், உயரமான இடங்கள், குற்றவாளி அல்லது குழு வன்முறை, தனிமையில் இருப்பது, வருங்காலம், அணு ஆயுதப்போர் போன்றவையாகும். மக்கள் கற்றறிதல் மூலமாகக் குறிப்பிட்ட பயங்களை வளர்த்துக் கொள்கிறார்களென்று நடத்தையியலாளர்கள் தெரிவித்தாலும், நரம்பியல் வல்லுனர்கள் அமிக்டலா என்னும் சுரப்புநீர் அதிகம் வெளிப்படுவதே பயத்திற்குக் காரணம் என்கின்றனர்.
English
An intense and persistent fear of an object or situation. Psychosocial theorists think this is caused by displacement of a conflict onto an external object, where it will be presumably more tolerable and avoidable. Behavioral theorists think it is a consequence of a chain of associations of various negative stimuli. Phobias are the main symptom of a phobic disorder. There are an infinite number of identifiable phobias because every potential experience and stimulus could result in this fear. Some examples are agoraphobia, acrophobia, claustrophobia, nyctaphobia, xenophobia, and zoophobia.