phobic avoidance

பயம் (தரும் சம்பவங்களை) தவிர்த்தல்

தமிழ் விளக்கம்

பயத்தைத் தூண்டும் சம்பவங்களையோ பொருட்களையோ தவிர்ப்பதும், அதைப்பற்றி எண்ண மறுப்பதும் பயச் சீர்கேட்டின் விளைவாகும். தவிர்த்தலும், மறுத்தலும் மனதை ஒடுக்கி, அவர்களின் இயல்பான செயல்பாடுகளைப் பாதித்து, அன்றாடக் கடமைகளைச் செய்ய இயலா நிலைக்குக் கொண்டு செல்லும்.

English

A symptom of phobic disorder in which the individual attempts to stay away from the feared object or situation (phobic stimulus) or avoids even thinking about such things. This often results in such social and mental constriction that psychosocial functioning is impaired and activities of daily living (ADL) are not fulfilled.