phobic disorder
பயக் கோளாறு, பயச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
இதை பயத்தினால் வரும் நரம்புத் தளர்ச்சி என்றும் கூறுவர். இது காரண காரியமற்று, ஒன்றைப்பற்றி தொடர்ந்து எண்ணுவதாலும், அதைத் தவிர்க்க முயல்வதாலும் ஏற்படும் அதீத மனப்பதட்டத்தினால் ஏற்படுவது. பயஉணர்வுகள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவையாவன 1. வெளியச்சம் (திறந்த வெளிகளைக் கண்டு ஏற்படும் அச்சம்) 2. சமூக அச்சம் 3. பறவைகள், விலங்குகள், இருள் போன்றவற்றைப் பார்த்து அச்சமடையும் எளிய அச்சம்.
English
Also called "phobic neurosis," an anxiety disorder in which anxiety is the predominant disturbance. The essential feature is a persistent and irrational fear of a specific object or situation resulting in serious attempts to avoid it. The three types of phobic disorder are agoraphobia, social phobia, and specific phobia. Specific phobias were once called "simple phobias."