phobic stimulus
பய ஊக்கிகள்
தமிழ் விளக்கம்
ஒருவரிடத்தில் பதட்டத்தை உருவாக்குமளவு அவர் பார்வைப் பரப்பில் உள்ள, அவரால் தெளிவாகக் கவனிக்கத்தக்க பொருட்களையும், சம்பவங்களையும் பயஊக்கிகள் எனலாம். அது உண்மையான பொருளாக (உதாரணம் ஊர்ந்து செல்லும் பாம்பு, உயரமான இடம்) அல்லது நிகழ்ச்சியாக (உதாரணம். அவர் ஆற்றவிருக்கும் மேடைப்பேச்சு) அல்லது அவர் எதிர்கொண்டே ஆகவேண்டிய நபர் அல்லது நிகழ்ச்சி போன்றவையாக இருக்கலாம். இதிலிருந்து ஏற்படும் பயம் என்பது பய ஊக்கிகளிடமிருந்து எவ்வளவு அருகில் அல்லது தொலைவில் இருக்கின்றார் என்பதும், அதிலிருந்து எவ்வளவு தூரம் தப்பிக்க இயலும் என்பதைப் பொறுத்தே அமையும். இந்த பயஊக்கிகள் பயத்தைப் பொறுத்து மாறுபடும். அது விலங்குகளாகவோ, இயற்கைச் சூழலாகவோ (புயல், உயரம், நீர்), இரத்தமாகவோ (அறுவைச் சிகிச்சை, கொடூர விபத்து), குறிப்பிட்ட சூழலோ (மின் தூக்கிகளில் நுழைவது, சுரங்கத்தில் நுழைவது, பறப்பது, பெரிய பாலங்களைக் கடப்பது), வேறுவகையான காரணங்களான நோய் வருமோ, கீழே தடுமாறி விழுந்து விடுவோமோ போன்றவையெல்லாம் பயத்தை உருவாக்கும் பல காரணிகள்.
English
Clearly discernible, circumscribed objects or situations that produce an immediate anxiety response. The stimulus can be an actual object (for example, snakes, high places) or a situation (for example, giving a public speech), or it may be anticipation of an encounter with it. The level of anxiety or fear usually varies according to the proximity of the stimulus and the degree to which escape from it seems possible. Types of stimuli in specific phobia are animal type (generally with a childhood onset), natural environment type (storms, heights, water), blood-injection type (the sight of blood, needles, medical operations), situational types (entering elevators or tunnels, crossing bridges, flying), and other types (fear of contracting illness, loud noises, falling down). See also agoraphobia and social phobia.