phonological disorder

உச்சரிப்புச் சீர்கேடு, தெளிவற்ற பேச்சு

தமிழ் விளக்கம்

ஒருசில எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க இயலாமை. உதாரணம் ழ, ல, ள. தெளிவாக உச்சரிக்க இயலாததால் அந்த எழுத்துக்கள் வரும் சொற்றொடர்களின் உச்சரிப்பு தெளிவற்று குழந்தைகளின் மழலை போன்று ஒலிக்கும்.
மொழியின் மூலமாக வெளிப்படுத்துவதில் கோளாறு, வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாகத் தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் - மொழி வெளிப்பாட்டுச் சிக்கல்கள் அல்லது மொழியின் மூலமாகத் (வாய்மொழி மற்றும் எழுத்து) தொடர்பு கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் என்பது அடிப்படையில் தகவல் தொடர்புச் சீர்கேடாகும். இவர்களிடம் கருத்துக்கள் இருந்தாலும் அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கேற்ப சொல்வளம் இல்லாதது, சொற்களைப் போதுமான அளவிலும், புரியும்படியாயும் வார்த்தைகளாக்க முடியாதது, வினையின் காலத்தைத் தெளிவில்லாமல் பயன்படுத்துவது (errors in tenses), கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்தச் சீர்கேடு கற்றல், தொழில் செய்தல் மற்றும் தொடர்பாடலில் குறுக்கிட்டுத் திறனழிக்கும். இது வளர் பருவச் சீர்கேடாகக் கருதப்பட்டாலும், (Developmental expressive language disorder) தானகச் சரியாகாது. இதைச் சரிசெய்ய பேச்சுப் பயிற்சி சிகிச்சை தரப்படவேண்டும். சில நேரங்களில் மருத்துவக் காரணங்களாலோ, அதிரிச்சியாலோ மூளை பாதிப்பிற்குள்ளாவதாலும், வலிப்பினாலும் இந்தச் சீர்கேடு உருவாகலாம்.

English

A communication disorder (formerly known as developmental articulation disorder) characterized by one's failure to use developmentally expected speech sounds that are age and dialect appropriate. The individual may have difficulty pronouncing certain sounds clearly or pronouncing such sounds as r, sh, th, f, z, 1, or ch, often making substitutions for these sounds. If mental retardation, speech-motor or sensory deficit, or socio-cultural deprivation is present, the speech difficulties exceed those associated with such problems. See also expressive language disorder, mixed receptive-expressive language disorder, and stuttering.