phototherapy
புகைப்படச் சிகிச்சை, காணொளி சிகிச்சை
தமிழ் விளக்கம்
புகைப்படங்கள், ஒளி ஒலி (வீடியோ) நாடாக்கள் மற்றும் வரிவுருவப் படங்கள் மற்றும் பிற காணொளிக் காட்சிகள் மூலமாக ஒரு வாடிக்கையாளர் தன்னைப் பற்றியும், தனது சூழ்நிலை மற்றும் உலகைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவுவதோடு தன்னை, தன் செயல்களை அதிகக் கலைநயத்துடன் வெளிப்பட உதவி செய்யும் மனித சேவை உத்திகள். புகைப்படச் சிகிச்சை என்பது பொதுவாக மற்ற சிகிச்சை முறைகளான உளப்பிணி சிகிச்சை முறையோடு இணைத்துச் செய்யப்படுவது. சர்வதேசப் புகைப்படச் சிகிச்சை சங்கம் 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது புகைப்படச் சிகிச்சை தொடர்பான பயிற்சிகள், புதிய உத்திகள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
English
The human services intervention that emphasizes the use of photographs, film, videotapes, and other graphic depictions to help clients achieve greater understanding about themselves and their world and to express themselves artistically. Phototherapy is often used in conjunction with other forms of psychotherapy to achieve these goals. The International Phototherapy Association (IPA), founded in 1981, promotes the use of this method, facilitates professional interactions, encourages training, and disseminates information.