physician

மருத்துவர், வைத்தியர், நோய்தீர்ப்பவர், கோளாறு அகற்றுபவர், தீங்கு நீக்குபவர், விடதாரி, பரிகாரி, இடாக்குத்தர், அகதகாரன், பிடகன், மாமாத்திரன்

தமிழ் விளக்கம்

மருத்துவத் தொழிலைச் செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர் (Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். பெரும்பாலான நாடுகளில் பல ஆண்டுகள் நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும், நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி பயில ஐந்து ஆண்டுகளிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம். முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்துச் சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்படுவர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. சித்த வைத்தியம், ஆயூர்வேத வைத்தியம் மற்றும் ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப்படுவதால், அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள். வேறெந்த முன்னிணைப்பும் (prefix) இல்லாமல் மருத்துவர் என்று அழைக்கப்படுபவர்கள் ஆங்கில முறையிலான மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாவர்கள். ஆங்கில மருத்துவம் படிக்க இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இதில் நான்கரையாண்டுகள் பல்வேறு மருத்துவ கல்வியும், நேரடியாக நோயாளிகளைப் பரிசோதித்தும், படித்து முடித்த பின்னால் ஒரு வருடம் பயிற்சி மருத்துவமும் முடித்த பின்னர் எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்படும்.
மருத்துவர் வகைகள் 1. உடல் சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள் (தலைப்பகுதி, செவித்திறன் சிகிச்சை மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்கள், கண் மருத்துவர், பல் மருத்துவர்கள்) 2. உள்ளுறுப்புகள் பகுதி (இதயநோய் மருத்துவர்கள், நுரையீரல்நோய் சிகிச்சை, இரைப்பைக் குடலியல் மருத்துவர்கள், கல்லீரலியல் மருத்துவர்கள், சிறுநீரக மருத்துவர்கள்) 3. உடற்செயலியல் வல்லுநர்கள் (நரம்பியல் மருத்துவர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்) 4. இரத்தவியல் மருத்துவர்கள் (அகச்சுரப்பு நோய் மருத்துவர்கள்) 5. முடவியல் (அ) முடக்குவியல் மருத்துவர் 6. தோல்பகுதி (தோல்நோய், தோல்மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒவ்வாமை மருத்துவர் அடிக்கால் மருத்துவர்) 7. மனம்சார்ந்த சிகிச்சை மருத்துவர்கள் (மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள்) 8. பாலியல் மருத்துவர்கள் (ஆன்ட்ராலஜிஸ்ட்) 9. மகப்பேறு மருத்துவர்கள் 10. குழந்தைநல மருத்துவர்கள் - குழந்தை நோயியல் மருத்துவர்கள் 11. பெரிநேடொலொஜிஸ்ட் 12. இண்டர்னிஸ்ட் 13.பொது குடும்ப நலமருத்துவர்கள் 13. .அவசர சிகிச்சை மருத்துவர்கள்.14. மயக்கவியல் மருத்துவர்கள்.15. அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் 16. கதிரியக்க வல்லுனர்கள் 17. நோயியல் மருத்துவர்கள் 18. நோயறி மருத்துவர்கள்.

English

A health care professional with an educational degree of doctor of medicine (MD) or doctor of osteopathy (DO) and the highest level of responsibility in patient care. Training to be a physician begins after receiving an undergraduate degree. Medical school typically consists of four years of academic and clinical training. This is followed by an in-hospital residency training period of three or more years, depending on the specialty. The first residence year (once known as the internship) is known as the PGY-1 (first postgraduate year). After successful completion of PGY-1, the student may take exams for medical licensure. In the United States, medical licensure is state regulated. The new physician then completes three to six years of in-hospital residency training in an area of specialization. In the United States many physicians become board certified in one of 23 specialties: allergy and immunology, anesthesiology, colon and rectal surgery, dermatology, emergency medicine, family practice, internal medicine, neurological surgery, nuclear medicine, obstetrics and gynecology, ophthalmology, orthopedic surgery, otolaryngology, pathology, pediatrics, physical medicine and rehabilitation, plastic surgery, preventive medicine, psychiatry and neurology, radiology, surgery, thoracic surgery, and urology. Physicians known as general practitioners are now rare, and primary care is usually filled by physicians who are family practitioners or internists. See also osteopath.