physician-assisted suicide
மருத்துவர் உதவியுடன் செய்துகொள்ளும் தற்கொலை
தமிழ் விளக்கம்
இந்தத் தற்கொலை மருத்துவர் கண்காணிப்பில் நோயாளிக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரியப்படுத்தி, அவரின் உயிரை நீட்டிக்க வைக்கும் சிகிச்சை முறைகளை நிறுத்தி, இயல்பான மரணம் வரவைக்கும் நடைமுறையிலிருந்து மாறுபட்டது. இது கருணைக்கொலை அல்லது வதையா அழிப்பு எனப்படும். மருத்துவர் உதவியுடன் செய்து கொள்ளும் தற்கொலை இருவகையானது. 1. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளில் சில மருந்துகளை பரிந்துரைத்த அளவுக்கு மேலாக எடுத்துக்கொள்ளும் போது அது ஆபத்தானது உயிர் பறிக்க வல்லது என்று நோயாளி தெரிந்துகொண்டு மருத்துவருக்குத் தெரியாமலே தற்கொலை எண்ணத்துடன் அந்த மருந்துகளை உட்கொண்டு உயிர் துறப்பது. 2. மருத்துவரே, நோயாளியின் தற்கொலை மனநிலையைப் புரிந்துகொண்டு ஓர் மருந்தின் உயிர்பறிக்கும் தன்மையை விளக்கி விடுவது. இந்த இரண்டு முறைகளிலும் மருத்துவர் நேரடியாகத் தற்கொலையோடு சம்பந்தப்படாவிட்டாலும், தற்கொலைக்கு உதவியதாக சில நாடுகளில் மருத்துவர் மேல் குற்றச்சாட்டு எழுவதுண்டு.
English
A patient's use of a medical doctor's drugs, instruments, and expertise to consciously and deliberately take his or her own life. For example, the physician may provide lethal drugs and the means by which the patient can use them directly without further help, but the patient actually carries out the suicidal act. In many jurisdictions this may legally implicate the physician as an accomplice to a crime. Physician-assisted suicide is not the same as passive euthanasia.