placater role
இணக்குவிப்பவர், சாந்தப்படுத்துபவர், சமாதானம் செய்பவர்
தமிழ் விளக்கம்
பிறருடன் உறவாடுவதில் எப்போதும் எதிரிலிருப்பவரின் நல்லெண்ணத்தைப் பெற முயற்சி செய்வதிலும், கோபமாக இருக்கும்போது மன்னிப்பு கேட்பதும், கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்ப்பதிலும், முக்கியமானவர்களிடத்தில் ஒப்புதல் பெற முனைவதும் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். பிறருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யமுடியாதபோதும், அச்சுறுத்துதலுக்கு ஆட்படும் போதும், பெரும்பாலான மக்கள் அதை எதிர்கொள்ளும் நான்கு வழிமுறைகளில் (1. சாந்தப்படுத்துபவர் (placator) 2. பிறர்மீது குற்றம் சுமத்துபவர் (Blamer) 3. நாசூக்குப் பேச்சில் தன்னை மறைத்துக்கொள்பவர் (Computer role) 4. கவனத்தைத் திசை திருப்புபவர் (distractor)) எதிர்கொள்கிறார்கள் என்று வர்ஜீனியா சதிர் என்ற உளவியலார் தெரிவிக்கின்றார். சாந்தப்படுத்துபர் எதெற்கெடுத்தாலும் 'நீங்க சொன்னா சரியாய்த்தான் இருக்கும் தலைவரே' என்று பின்பாட்டுப் பாடுபவராய் இருப்பார்.
English
A recurrent pattern of communication one assumes in relating to others, characterized by talking in an ingratiating way, apologizing, avoiding disagreements, and attempting repeatedly to gain the approval of the relevant other. This role was delineated by Virginia Satir (1920-1987) (Peoplemaking, Palo Alto, CA: Science and Behavior Books, 1972, p. 63), who described this person as a "yes- man" who feels worthless without the approval of others. Other roles are the blamer role, the computer role, and the distracter role.