placebo

மருந்துப் போலி, ஆறுதல் மருந்து, மருந்துக்குப் போலி, மருந்துக்குப் பதில், நோய் இல்லாதபோதும் நோய் இருப்பதாக விடாப்பிடியாகத் தொல்லை கொடுப்பவருக்கு கொடுக்கும் மருந்து

தமிழ் விளக்கம்

இது எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாத செயலற்ற மருந்து. மருந்துகளின் திறனறியும் ஆய்வுகளில், பரிசோதனைக் குழுவிற்கு கொடுக்கப்படும் மருந்தோடு, கட்டுப்பாடுக் குழுவிற்கு இது மாதிரியான செயலற்ற மருந்துப் போலிகளை கொடுத்து ஆய்வு செய்யப்படும் மருந்தின் திறன் சோதிக்கப்படும். தான் நோயுற்றதாக பிரமையிலிருக்கும் சிலருக்கு மருந்தாக மருந்துப் போலிகளை பரிந்துரைத்து சமாதானப்படுத்துவதுண்டு. இந்த மருந்து செயலற்றதாக இருந்தாலும், இந்த போலி மருந்தினால் குணமடைந்ததாக நோயாளி நம்புவதுண்டு

English

An inert preparation that is made to appear identical to or presented to patients as an active drug. When used in research that is double blind, the investigator tests the effectiveness of a drug by giving it to half the subjects and the placebo to the others. Sometimes placebos are also given to patients who apparently do not need an active drug but who seek the attention or secondary gain that comes from using one. A physical effect based on an individual's belief that the inactive substance is working is called a "placebo effect." The term used in most English speaking nations outside the United States is "dummy."