placement
பணியில் அமர்த்துதல், பணியமர்த்தம், பதவியமர்நிலை, அமைவுறுதல், இடவமைவு, இடநிலைப்படுத்தல்
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான பொறுப்புகளை அதற்குப் பொருத்தமான நபரிடம் ஒப்படைத்தல் அல்லது பொருத்தமான நபரை ஒரு பதவியில் இடநிலைப்படுத்தல் நடைமுறையை இவ்வார்த்தை பொதுவாகக் குறிக்கும். ஆனால் சமூகப்பணியில் உதவி தேவைப்படும் குழந்தையையோ அல்லது முதியவர்களையோ அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் நலம் பேணகத்திலோ அல்லது தனிநபரிடமோ அப்பொறுப்புக்களை ஒப்படைப்பதையும், சமூகப்பணி மாணவர்களின் களப்பணிப் பயிற்சியின் பொருட்டு அவர்களை ஒருநிறுவனத்தோடு இணைப்பதையும் குறிக்கும்.
English
The assignment to or location of an individual in a setting that is suitable to achieve a specified purpose. Social workers use the term mostly to indicate the assignment of a child or dependent adult to a facility or person who can provide for their needs. The term also refers to the social work student's assignment to a social agency for practice in field instruction.