plagiarism

எழுத்துத் திருட்டு, கருத்துத் திருட்டு, மற்றவர் எழுத்துக்களை அல்லது எண்ணங்களைத் திருடுதல், பிறருடைய நூலைத் திருட்டுத்தனமாக வெளியீடுதல்

தமிழ் விளக்கம்

மற்றவர்களுடைய கருத்தையோ, ஆய்வையோ அல்லது எழுத்தையோ பின்பற்றியோ, நகலெடுத்தோ அல்லது திருட்டுத்தனமாக அபகரித்தோ தன்னுடைய சொந்த முயற்சியில் உருவானதுபோல் தோற்றப்படுத்தல். இது மாதிரி திருடப்படும் அல்லது நகலெடுக்கப்படும் மூலப் படைப்புகள் பதிப்புரிமையோ அல்லது காப்புரிமையோ செய்யப்பட்டிருக்கும் பட்சம் அது சட்டவிரோதமான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். சமூகப்பணியில் இந்த மாதிரியான செயல்கள் நியாயமற்ற செயல்களாகவே கருதப்படும்.

English

The act of appropriating the scientific or literary writings of another person and presenting it as one's own work. Plagiarism is a crime when such work has been copyrighted or when state laws specify conditions in which such acts are unlawful (as in selling term papers). The act is considered unethical by social workers.