Planned Parenthood Federation of America (PPFA)

திட்டமிட்ட குடும்பத்திற்கான அமெரிக்க சம்மேளனம், திட்டமிட்ட தாய்மைக்கான அமெரிக்க சம்மேளனம்

தமிழ் விளக்கம்

மார்கரெட் சாங்கர் (Margaret Sanger -1883-1966) என்ற பெண்மணியால் குடும்பக்கட்டுபாட்டையும், கருத்தடை முறைகளையும் பரவலாக்க, 1939 ஆம் ஆண்டு, குடும்பக் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க சம்மேளனம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய இயக்கம். தன்னிச்சையாகச் செயல்படும் 85 கிளைகளுடனும், 820 மருத்துவமனைகளுடனும் இயங்கும் மிகப்பெரிய தேசிய அமைப்பு. திருமணமாகாமல் கருவுறும் வளரிளம் தாய்மார்களுக்கும், ஏழைத் தாய்மார்களுக்கும் சேவை அளிப்பதுடன் மட்டுமல்ல, இனப்பெருக்க ஆரோக்கியத்திலும், பெண்கள் ஆரோக்கியத்திலும், பெண்ணுரிமைச் செயல்பாடுகளிலும் செயல்படும் அமைப்பு. ஆண்டொன்றிற்கு 50 இலட்சம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைசெய்யும் இந்நிறுவனத்தின் சேவையைப் பெறுபவர்களில் 26 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் 19 வயதிற்கு உட்பட்ட இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது

English

A national organization established by Margaret Sanger (1883-1966) in 1921 to promote planned birth control and contraception. Its original name, until 1939, was the American Birth Control League.