planning
திட்டமிடல், பழனுதல், முன்யோசனை
தமிழ் விளக்கம்
1. திட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்துப் பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead) என்பதாகும். இன்னொரு வகையில் கூறின், திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவதினால், இதனை எதிர்காலச் செயலுக்குத் தற்போது கையிருப்பிலுள்ள மக்கள் சக்தி, மூலப் பொருட்கள் என்பவற்றைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்திப் பூரணத்துவம் பெறுவதற்கு உதவி புரியும் நிகழ்ச்சி நிரல் எனவும் கூறிக் கொள்ளலாம்.
2. எதிர்காலக் குறிக்கோள்களை நிச்சயித்து, அதை அடைவதற்கான வழிமுறைகளை மதிப்பிட்டு, அதற்குப் பொருத்தமான பல நடவடிக்கைகளைச் சிந்தித்து, அதிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் செயல்படும் முறை திட்டமிடல் எனப்படுகிறது. சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது பொருத்தமான பல வழிமுறைகளைப் பரிசோதித்து, அதிலிருந்து அறிவுக்கு ஏற்புடையதான ஒன்றைத் தெரிவு செய்வது. இந்த வழிமுறைகள் என்பது வரம்பிற்குட்பட்டதாகவும், பாரீட்சார்த்தமானதாகவும், படிப்படியாக முடிவெடுக்க உதவுவதாகவும் அமையும். திட்டமிடல் என்பது பொதுவாகத் தேவைகள் அல்லது எதிர்பார்ப்புகளையும், அதைப் பூர்த்திசெய்யக் கிடைக்கும் ஆதாரங்களையும் சமன் செய்வதாக அமைந்திருக்கும். திட்டமிடுதலில் அடையவேண்டிய குறிக்கோள்களை அடையாளம் காணுதல், அதை அடையத்தகுந்த உத்திகளைப் பற்றிச் சிந்தித்தல், உத்திகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகளை ஏற்பாடு செய்தல், அந்த வழிமுறைகளைச் செயல்படுத்தல், அதை ஒன்றன்பின் ஒன்றாகத் தொய்வின்றி கொண்டுசெல்லல் மற்றும் அதைத் தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பல செயல்முறைகள் அடங்கும். நகர்ப்புற மேலாண்மையில் திட்டமிடல் என்பது, கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்குதல் முறைகளின் மூலம் நகர எல்லைக்கு உள்ளடங்கிய நிலப் பயன்பாட்டையும், கட்டடப்பணிகளையும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் வழிநடத்தும் செயலைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படும்.

English
The process of specifying future objectives, evaluating the means for achieving them, and making deliberate choices about appropriate courses of action. This process of choice involves two aspects: (1) rational decision making, which seeks to examine all relevant alternatives and select from among them, and (2) incremental decision making, which encompasses a more limited range of alternatives and practical considerations. See also social planning and social policy.