play therapy

விளையாட்டுச் (பொழுது போக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல்) சிகிச்சை

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களாலும், பிற மானுட சேவைப் பணியாளர்களாலும் மூன்று வயதிலிருந்து 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் தொடர்பாற்றல் திறனில் (communication) உள்ள பிரச்சனைகளை அறிந்துகொள்ளவும், அதைச் சரிசெய்யவும் கையாளப்படும் உளப்பிணி சிகிச்சை மற்றும் ஆலோசனை முறை. சொற்களால் வெளிப்படுத்த முடியாத மனக்குழப்பங்களையும், உணர்வுகளையும் குழந்தைகளுடன் விளையாடியோ அல்லது அவர்களை பொம்மைகளைக் கையாள வைத்தோ அறிந்துகொண்டு அதற்கான சிகிச்சை அளிப்பது. இச்சிகிச்சை முறை பொதுவாகக் குழந்தைகளிடம் கையாளப்பட்டாலும், சில சூழ்நிலைகளில் முழாள்களிடமும் (வயதுக்கு வந்தவர்கள்) பயன்படுத்தப்படுகிறது.

English

A form of psychotherapy used by social workers and other professionals to facilitate communication. The client uses toys to act out conflicts or to demonstrate situations that cannot be verbalized. Play therapy is most commonly used in work with children but is also effective and useful with adults in certain circumstances.