pleasure principle

இன்பநுகர்வுக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மனித இயல்பென்பது வலியையும், அசவுகரியத்தையும் தவிர்த்து, மனநிறைவையும் மகிழ்ச்சியையும் நாடுவதையே நோக்கமாகக் கொண்டது என்று உளப்பிணி மருத்துவர் பிராய்ட் எடுத்துரைத்த கோட்பாடு. மகிழ்ச்சி அடைவதே இயல்பென்றாலும், ஒரு குழந்தை வளரும்போது, இன்ப நுகர்விச்சையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டியதன் எதார்த்ததைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றது. இயல்பான இன்பநுகர்வு, உணர்வு உந்தலையும், அதை ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய நிதர்சன உண்மையும் அறிந்து, அதை ஒவ்வொரு மனிதனின் தன்முனைப்பின் மூலம் (ego) கட்டுக்குள் கொண்டுவந்து, எதார்த்த வரையறைகளை மீறாத இன்பநுகர்வை அனுமதிக்கின்றது.

English

A principle in Freudian theory stating that the individual begins life seeking only gratification and pleasure and the avoidance of pain and discomfort. The developing child eventually learns that immediate gratification sometimes has to be subordinated, so the reality principle starts to emerge. Thereafter the person faces a lifelong conflict between both. The healthy ego tries to adhere to the reality principle while allowing some room for the pleasure principle.