plenary session

முழுமையான அமர்வு

தமிழ் விளக்கம்

ஒரு மாநாட்டில் அல்லது கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் கூட்டம். கருத்தரங்கப் பிரதிநிதிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில விவாத அமர்வுகளிலோ அல்லது பணியரங்கு அமர்வுகளிலோதான் பங்கேற்பார்கள். பிரசித்தி பெற்ற பேச்சாளரோ அல்லது தலைவரோ உரையாற்றும் போது அனைத்துப் பிரதிநிதிகளும் பங்கேற்கும்படியான முழுமையான அமர்வு கூடும். அல்லது பிரதிநிதிகள் தொடர்புடைய பிரச்சனைகளில் பொதுக்கருத்தறிய அல்லது சில தீர்மானங்களின் மீது வாக்கெடுப்பு நடத்த முழுமையான அமர்வு ஏற்பாடு செய்யப்படும்.

English

A meeting for everyone who attends a conference. Most conference participants spend part of their time at smaller gatherings called workshops or sessions but occasionally meet in the plenary sessions with all the other participants, usually to hear some notable speaker or vote on issues pertaining to the whole group.