Plessy v. Ferguson

பிளஸ்ஸி Vs பெர்குசன் வழக்கு

தமிழ் விளக்கம்

பொதுப்போக்குவரத்து முறைகளில் இனரீதியாக ஒதுக்கி வைக்கும் முறையை நியாயமென்றும் அரசியல் சாசனச் சட்டப்படி செல்லத்தக்கதென்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. எங்கெங்கு சமமான இணையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இனரீதியாக ஒதுக்கி வைக்கலாம் என்ற இந்தத் தீர்ப்பினால் பல இடங்களிலும் இனரீதியான பாரபட்சம் சட்டபூர்வமாகியது. இந்தச் சட்டம் 1954 ஆம் ஆண்டு வந்த பிரவுன் Vs கல்வித்துறை வழக்கின் போது முடிவுக்கு வந்தது.

English

The 1896 U.S. Supreme Court decision upholding a state law permitting segregation of the races in public transportation. The ruling, which was extended to other public places, held that segregation was permissible under the Constitution as long as "separate but equal" facilities existed. The ruling was not reversed until the 1954 Supreme Court decision in Brown v. Board of Education.