police social work

காவல்துறை சார் சமூகப்பணி

தமிழ் விளக்கம்

ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்குள்ளோ, நீதி மன்றங்களிலோ அல்லது சிறைச்சாலைகளிலோ குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் செய்யப்படும் பலவிதமான சமூக சேவை அல்லது உதவிகள். காவல் துறையோடு சம்பந்தப்பட்ட இச்சமூகப்பணியை தன்னார்வமாகச் செய்பவர்களும், காவலர்களிலே ஒரு சிலரும், பயிற்சி பெற்ற சமூகப்பணியாளர்களும் என்று பல நிலையிலுள்ளவர்கள் செய்கின்றார்கள். இவர்கள் காவலர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பணிரீதியான மனஉலைச்சலுக்கும் ஆறுதல் சொல்கிறார்கள். காவல் துறைக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மத்தியஸ்தம் செய்வதன் மூலமாகக் காவல் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாகச் செயல்படுவதுமுண்டு.

English

Professional social work practice within police precinct houses, courthouses, and jail settings to provide a variety of social services to victims of crimes, people accused of crimes, and their families. Some workers counsel police officers and members of their families under job-related stresses. They sometimes act as advocates and public-relations specialists for police departments and help in mediation with various community groups. A major activity is helping resolve domestic troubles for which the police are called. Some police social workers are civilians, and others are police officers as well as professional social workers.