policy

கொள்கை, ஈட்டுறுதி ஆவணம்

தமிழ் விளக்கம்

பொருளாதாரக் கொள்கை (economic policy), வேளாண்மைக் கொள்கை (agriculture policy), பண வீக்கத் தடுப்பு வரிக்கொள்கை (anti-inflationary tax policy), உயிரியல் தொழில் நுட்பக் கொள்கை (bio technology policy), ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (export-import(exim)policy), industrial policy (தொழிற் கொள்கை), insurance policy (ஈட்டுறுதி ஆவணம்), monetary policy (பணக் கொள்கை), tax policy (வரிக் கொள்கை), Social Policy (சமூகக் கொள்கை), Social Welfare Policy (சமூக நலக் கொள்கை) - கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்தச் சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. அரசின் கல்விக் கொள்கை, சமூக நலக் கொள்கை, விவசாயக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆங்கிலத்தில் Policy, Principle ஆகிய இரு சொற்களுக்கு இணையாகத் தமிழில் கொள்கை என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. கொள்கை என்பது பெரும்பாலும் ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்பதை, அந்த செயலைச் செய்வதற்கு உரிய அதிகாரம் படைத்த நிறுவனம், அந்த செயலோடு சம்பந்தப்பட்ட அனைவரும் பின்பற்றும்படியாக வெளிப்படையாகவோ (எழுத்து பூர்வமாக) அல்லது புரியும்படியாகவோ எடுத்துச் சொல்லும் கருத்துக்களின் தொகுப்பு. கொள்கை என்பது ஒரு குறிக்கோளை அமல்படுத்தும் போது (செயலாக்கம்) பிரக்ஞாபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அல்லது வழிகாட்டல்களின் தொகுப்பு. கொள்கை என்பதில் பின்வரும் கூறுகளைக் காணலாம். 1. கொள்கை என்பது நிர்வாகத்திற்கான வழிகாட்டி 2. கொள்கை என்பது ஒரு பிரச்சனையுடனோ அல்லது வாய்ப்புடனோ சமந்தப்பட்டது 3. எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யலாகாது என்பதைப்பற்றிய விளக்கம். 4. கொள்கை எப்போதும் எதிகாலத்தைப் பற்றியதாயிருக்கும் 5. கொள்கை என்பது எதார்த்தத்தையும் ஆக்கபூர்வமான கற்பனையையும் பிரதிபலிக்கும். 6. கொள்கை அது செய்ய உத்தேசித்திருக்கும் செயல் பற்றிய பரந்துபட்ட சிந்தனையையும் (global), விழுமியங்களையும் (values) கொண்டதாக இருக்கும் 7. கொள்கை ஒன்றை எந்தக் கண்ணோட்டத்துடன் / தொலை நோக்குடன் (perspective, vision, way of looking) பார்க்க வேண்டும், அதற்கான செய்முறை (prescriptive) என்ன, அதற்கான காலவரையறை என்ன என்பதைப் பற்றித் தெளிவாக்கும். 8. ஒரு செயலைச் செய்து முடிக்க அதிகாரத்தையும், வளங்களையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டி. 9. ஒரு பிரச்சனை அல்லது வாய்ப்புடன் சம்மந்தப்பட்ட அறிவை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதை எப்படி மதிப்பீடு செய்து பயன்படுத்துவது என்பதற்கு விளக்கம் அளிக்கும்.

English

The explicit or implicit standing plan that an organization or government uses as a guide for action.