policy analysis

கொள்கைப் பகுப்பாய்வு

தமிழ் விளக்கம்

ஒரு கொள்கையைப் பற்றியும், அக்கொள்கையை உருவாக்கக் கையாண்ட வழிமுறைகளைப் பற்றியும் முறையாகச் செய்யப்படும் பகுப்பாய்வு. கொள்கை உருவான விதமும், அந்தக் கொள்கையால் ஏற்படும் விளைவுகளும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் படியாக உள்ளதா, அது அறிவுக்குப் பொருத்தமானதாக உள்ளதா, அது சட்டப்படியானதா, அது அனைவருக்கும் சமத்துவமானதா, அது அரசியல் ரீதியாக இயலுமையுடையதா (செய்யத்தக்கதா), சமூக விழுமியங்களுடன் ஒத்திணையும் தன்மை கொண்டதா, அது செலவு குறைந்ததா, அந்தக் கொள்கைக்கு இணையான மற்ற வழிமுறைகளிலிருந்து அது எவ்வளவு உயர்ந்தது, அது குறுகிய மற்றும் நீண்ட காலப்போக்கில் நிலையான பயன்களைத் தருமா போன்ற பல்வேறு கேள்விகளை மனதில் கொண்டு கொள்கைகளைப் பகுப்பாய்வு செய்யும் முறை. கொள்கைப் பகுப்பாய்வில் பெரும்பாலும் மூன்று அணுகுமுறைகள் கையாளப்படுகிறது. 1. கொள்கை உருவாக்கம் (கொள்கை உருவாக்கத்தில் கையாளப்பட்ட சமூக பொருளாதாரச் சிந்தனை) 2. கொள்கை பற்றியது (கொள்கை வடிவமைப்பு மற்றும் அது எந்தெந்த அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது) 3. கொள்கையின் செயலாக்கத் திறன் (செயலாக்கத்திற்கான செலவு செய்ததற்கு ஏற்ற மாதிரியான பலன்கள் மற்றும் அதைச் செயல்படுத்தும் விதம்)

English

Systematic evaluations of a policy and the process by which it was formulated. Those who conduct such analyses consider whether the process and result were rational, clear, explicit, equitable, legal, politically feasible, compatible with social values, cost-effective, and superior to all the alternatives in the short term and in the long run. Three approaches to policy analysis are (1) the study of process (sociopolitical variables in the dynamics of policy formulation), (2) the study of product (the values and assumptions that inform policy choices), and (3) the study of performance (cost-benefit outcomes of policy implementation).