policy decision-making theories
கொள்கை முடிவெடுத்தலைப் பற்றிய கோட்பாடுகள்
தமிழ் விளக்கம்
சமூகப் பொருளாதார நிர்பந்தங்களும், அதையொட்டிய பரிசீலனைகளும் எப்படி கொள்கைகளாகவும் சட்டங்களாகவும் உருவெடுக்கின்றது என்பதை விளக்கும் கோட்பாடுகள். கொள்கை உருவாக்கம் பற்றிய ஐந்து வகையான மாதிரிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. 1. சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படும் சபிரதாயமான கொள்கைகள் (traditional model) - இது பொதுநல நோக்குடையவர்கள் திட்டக்குழுக்களாக உருவாகி, என்ன செய்யவேண்டுமென்பதை அறிவுக்கு பொருத்தமான முறையில் திட்ட வல்லுனர்கள் உதவியுடன் வடிவமைத்து அதைக் கொள்கைகளாக / திட்டங்களாக பரிந்துரை செய்வது 2. கூம்பு (கோபுர வடிவம் / மேலிருந்து கீழான) வடிவ அதிகாரத்தால் உருவாக்கப்படும் கொள்கைகள் (power pyramid mode) - பெருவணிக நிறுவனங்கள் அரசியல்வாதிகளை நிர்பந்தித்து தங்களுக்குச் சாதகமான கொள்கைகளை பெருவாரியான மக்கள் மீது திணிப்பது. 3. பன்மை அதிகாரத்துவத்தால் உருவாக்கப்படும் கொள்கைகள் (Yale polyarchy power model) - வெவ்வேறு கருத்துக்களும், நிலைப்பாடுகளும் வெவ்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு கொள்கைகளாக மாறும் நடைமுறை. 4. பரவலான செல்வாக்குப் பெற்ற தகுதியுடைய குழுக்களால் உருவாக்கப்படும் கொள்கைகள் (qualified diffused-influence model) - பல்வேறு அளவிலான சிறுதும் பெரிதுமான ஆர்வக்குழுக்களின் செல்வாக்கால் உருவாகும் கொள்கைகள் 5. முறையான முடிவெடுக்கும் முறையால் உருவாகும் கொள்கை முடிவுகள் (decision process mode) - ஒரு விஷயத்தில் ஆர்வமுடைய பல்வேறு சமூக அமைப்புகள் தங்களுக்குள் தொடர்புகொண்டு, உரையாடி அதனடிப்படையில் படிப்படியாக எடுக்கப்படும் கொள்கைகள்
English
Explanations for the sociopolitical influences and considerations that are translated into specific policies and laws. Five models are used to explain how policy decisions are made: (1) "traditional model" (public- spirited citizens form planning groups, hire a planner, make rational decisions, and propose fair plans); (2) "power pyramid model" (a few business leaders influence politicians and impose decisions on those lower in the social structure); (3) "Yale polyarchic power model" (different issues each have different leadership patterns); (4) "qualified diffused-influence model" (influence is spread among many interest groups that change in size and importance over time); and (5) "decision process model" (the systems approach that sees decision making as a flow in which final decisions are the result of a series of interactions between various systems that all have interest in the decision).