poliomyelitis
இளம்பிள்ளை வாதம்
தமிழ் விளக்கம்
இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்திலுள்ள வைரஸ் (தீநுண்ம்) வழியாகப் பரவும் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர். இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேருக்கு நோயறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால், தசைநார்களைப் பலவீனமடையச் செய்து தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. ஜோனஸ் சால்க் என்ற மருத்துவர் இளம்பிள்ளை வாத நோய்க்கு தடுப்பூசி கண்டறிந்து, அதைக் காப்புரிமை செய்யாமல் இலவசமாக உலகிற்கு அர்ப்பணித்ததால், இளம்பிள்ளை வாதத் தடுப்பு முனைப்படைந்து, அந்த நோய் பல ஏழை நாடுகளிலிருந்து அகற்றப்பட்டது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் போலியோ அற்ற நாடாக இந்தியாவை 2014 ஆம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது.
English
A contagious viral disease that can cause nerve damage resulting in permanent paralysis of affected muscles; formerly known as "infantile paralysis." Polio, as it is more commonly called, had been controlled in the United States by preventive vaccines administered to young children. A resurgence of the disease is now occurring in some parts of the United States and other countries.