political action

அரசியல் செயல்பாடு / நடவடிக்கை

தமிழ் விளக்கம்

சட்டமியற்றலிலும், அமலாக்கத்திலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதில் செல்வாக்கு செலுத்தவும் செய்யப்படும் ஒருங்கிணைந்த முயற்சி. சமூகப் பணியாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதன் மூலமும், தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்தும், அவர்களுக்குத் தேர்தல் நிதி திரட்டியும், அவர்களுக்காக வாக்குகள் சேகரித்தும், அவர்களுக்கு ஆதரவாக பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கியும் பல வழிகளில் தங்களின் அரசியல் ஈடுபாடு மற்றும் நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் நடவடிக்கை என்பது தங்களின் குறிக்கோள்களுடன் ஒப்பான அரசியல் ஆதரவைத் தேடுவதும், சட்டமன்றக் குழுக்களிடம் சாட்சியமளிப்பதும், அரசதிகாரத்திலிருப்பவர்களையும் மற்றும் அரசுப்பணியாளர்களைக் கண்காணிப்பதும் என்று பல செயல்பாடுகளை உள்ளடக்கியது.

English

Coordinated efforts to influence legislation, election of candidates, and social causes. Social workers engage in political action by running for elective office, organizing campaigns in support of other candidates or issues, fundraising, and mobilizing voters and public opinion. Political action also includes lobbying, testifying before legislative committees, and monitoring the work of officeholders and government workers.