polygamy
பலதார மணவினைமுறை, பலதுணை மணம், பலமணம், பலதாரமணம், பலரை மணத்தல், பலமனைவியரை அல்லது கணவரையுடைய பண்பு, பல்லினச் சேர்க்கை
தமிழ் விளக்கம்
திருமணம் என்பது உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் கலாச்சார ரீதியாகவும், சட்டபூர்வமாகவும் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன. ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். ஒருதுணை மணம் (monogamy), பலதுணை மணம் (polygamy), பலமனைவி மணம் (polygyny), பலகணவர் மணம் (polyandry), குழு மணம் (cenogamy) என்று பலவகைப்படும்.
English
Plural marriage; a social custom that permits having more than one wife or husband at the same time. If the marriage involves one man with more than one wife, it is also called "polygyny." If it involves one woman with more than one husband, the term is "polyandry." Polygamy is not synonymous with bigamy. Polygamy is legal in some societies. See also monogamy.