Poor Law of 1834
1834 ஆம் ஆண்டின் வறியவர் சட்டம்
தமிழ் விளக்கம்
இச்சட்டம் 1601 ஆம் ஆண்டு எலிசபெத் அரசியாரால் போடப்பட்ட வறியவர் சட்டத்தின் மீதான திருத்தம். இது ஏழைகளை மனவலிமையில்லாதவர்களாகவும், ஒழுக்கமில்லாதவர்களாகவும் அனுமானித்து அதன்படி அவர்களைக் கடுமையாக நிந்தனை செய்தது. இது திறனுடைய திடகாத்திரமான ஏழைகளுக்கு உதவுவதை நிறுத்தியது. வறியவர்களுக்கான உதவி பெரும் தகுதியைக் குறைத்து, அவர்கள் குறைந்த கூலி பெறுபவர்களைவிட, அதிக உதவிகள் பெறவிடாமல் செய்தது. வறியவர்களுக்கு உதவும் பொறுப்புகளை ஸ்தல ஸ்தாபன அரசுகளிடமிருந்து விலக்கி அதை தேசிய அளவில் கையாளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. 1834 ஆம் ஆண்டின் சட்டச் சரத்துகளே இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அதன் பின் உருவான பொதுநலத் திட்டங்களின் மீது ஒரு நூற்றாண்டிற்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்தியது. பின்னர் வந்த மக்கள் உரிமைச் சாஸன இயக்கம் (Chartist Movement), பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவும், பிரதிநிதிப்படுத்தவும் சொத்துடமையை நிபந்தனையாக வைத்த தகுதியை ஒழித்து, ஆண்கள் அனைவருக்குமான வாக்குரிமை வேண்டியும், இரகசிய வாக்குப்பதிவு வேண்டியும், சமமான மக்கள் தொகையுள்ள தொகுதிகள் வேண்டியும், தொழிலாளர்களைக் கொண்டு போராடி உரிமைகளைப் பெற்றதால், வறியவர்கள் வாக்காளர்களாக மாறியதால், பல மாற்றங்கள் ஏற்பட்டது.
English
The English legislation enacted to revise the Elizabethan Poor Laws of 1601. The new law was punitive and based on the premise that poor people lacked strong or moral character. The laws discontinued public assistance for all able-bodied citizens except those in public institutions and imposed the less eligibility principle so that no beneficiary would receive as much as the lowest wage earner. The program was taken from local authorities and administered nationally. The principles of the Poor Law of 1834 had a significant influence on public welfare policy in the United States for more than a century. See also Chartist Movement and Edwin Chadwick.