population

மக்கள் தொகை

தமிழ் விளக்கம்

மக்கள் தொகை என்பது உயிரியலில், ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்த, தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினங்களின் தொகுப்பையும், சமூகவியலில் அது மனிதர்களின் தொகுப்பையும் குறிக்கும். மக்கள் தொகை (குடித்தொகை, சனத்தொகை), ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. இது பொதுவாகவும், தனிப்பட்ட அடையாளங்களைக் (பெண்கள், மதம், ஊனமுற்றவர்கள், இனம், மொழி) கொண்டுள்ள மக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.
2. சமூக ஆய்வில் மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு செய்யப்பட்ட மக்களையோ நிகழ்வுகளையோ குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

English

1. The total number of people in a nation or other specified geographic region; also, the number of people of a specified class or group (such as women, Roman Catholics, African Americans, and people with disabilities) in a specified place or geographic region. 2. In social research, the term refers to all people or cases that could theoretically be available for an investigation. It is from the population that a sample is taken for research. See also universe.