populism

ஜனரஞ்சகம், ஜனரஞ்சக அரசியல் / இயக்கங்கள்

தமிழ் விளக்கம்

பெருவாரியான ஜனங்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கைகளுக்கு முரணான, எதிரான சமூகப் பொருளாதார நிலைப்பாடு உருவாகும்போது, பெருவாரியான மக்கள் அல்லது பாதிக்கப்படுபவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் அரசியல் செயல்பாடு. இது வசதி படைத்தவர்களுக்கு எதிராகச் சாமானிய மக்களின் உரிமைகளையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள கையாளப்படும் அரசியல் கோட்பாடு. இது பெருவணிக நிறுவனங்கள், தொழில் குழுக்களின் நலனுக்கு அளிக்கும் முன்னுரிமையை விட ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், குடியானவர்கள் மற்றும் குறைந்த வருமானமுடையவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வற்புறுத்தும் அரசியல் நிலைப்பாடு. ஆனால் இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பவர்கள், இதைக் கவர்ச்சி வாக்குறுதிகள், வாய்வீச்சு அரசியல் என்று ஏளனம் செய்வர்.

English

A political orientation in which the interests of wage earners, farmers, and less-affluent families take precedence over those of business and professional groups.