Port Royal Experiment

போர்ட் துறைமுகப் பரிசோதனை

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பில், அமெரிக்கத் தென்மாநிலங்களோடு ஏற்பட்ட போரில், வடபகுதியைச் சேர்ந்த இராணுவம் முன்னேற, தென் பகுதியில் அடிமைகளாயிருந்த கருப்பினத்தவர் விடுதலை பெற்றனர். அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்திலிருந்த போர்ட் துறைமுகம், வடபகுதி இராணுவத்தால் முற்றுகையிடப்பட, அங்கிருந்த வெள்ளை நிலப்பிரபுக்கள் தங்கள் பண்ணைகளிலிருந்து வெளியேற, அப்பண்ணைகள் கறுப்பின அடிமைகளிடம் ஒப்படைக்கப்பட்டு சுதந்திர வாழ்வு பெற்றனர். கைவிடப்பட்ட பண்ணைகளில் கறுப்பின மக்கள் குடியேற்றப்பட்டு, அவர்கள் வேளாண்மையில் ஈடுபட உதவிகள் செய்யப்பட்டு மறுவாழ்வு பெற்றனர்.

English

The 1862 U.S. Civil War program to aid slaves who had been abandoned on island plantations when Northern soldiers arrived. The program was federally authorized, but because it was voluntarily funded, it could not meet the needs of those affected. It was discontinued when the Freedmen's Bureau was established in 1865.