positive transference

நேர்மறை உணர்வெழுச்சிப் பெயர்ச்சி, நேர்மறை உணர்வு மாற்றீடு

தமிழ் விளக்கம்

Transference என்றால் மனிதர்கள் குழந்தைப்பருவத்தில் பெற்ற ஆழ்மன உணர்வுகளை நிகழ்கால மனித உறவுகளோடு சம்பந்தப்படுத்துவது. தங்களின் ஆழ்மன உணர்வுகளைத் தாங்கள் தொடர்புகொள்ளும் மனிதர்களிடம் பிரதிபலிப்பது. சுருக்கமாக ஒருவர் தன் உணர்வுகளை பிறர் மீதும், பிற பொருட்கள் மீதும், சம்பவங்கள் மீதும் பிரக்கைஞையின்றி இடம் மாற்றுவது. இது இயல்பான மனச்செயல்பாடு என்றாலும், ஆழ்மனதில் உள்ள கசப்பான அல்லது நன்னிலை உணர்வுகள் பொருத்தமற்று பிறர்மீது பிரதிபலிக்கும் போது உறவுகளில் சிக்கல் உருவாகும். இந்த ஆழ்மனப் பகிர்வு பிறர் மீதான கவர்ச்சியாகவோ, சிற்றின்ப இச்சையாகவோ, கோபம், ஆத்திரமாகவோ, அவநம்பிக்கையாகவோ, பெற்றோர் சகோதர நிலை சார்ந்ததாகவோ, அல்லது குரு நிலை கொண்டதாகவோ இருக்கும் பட்சம், உறவு கொள்ளும் ஒருவரை அவரின் இயல்பு நிலையிலிருந்து பார்க்காமல் வேறுவிதமாகப் பார்ப்பது, உறவுகளின் தன்மையை வலுப்படுத்தலாம் அல்லது பாதிக்கலாம். Positive Transference என்பது நன்னிலை உணர்வு மாற்றீடு. இதில் ஒருவர் தான் தொடர்பு கொள்ளும் ஒருவரிடம் அன்பு, பிரேமை, அபிமானம் போன்ற நன்னிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவ்வுறவுகள் வலுப்படும்.

English

Transference that results in expressions of affection, love, erotic desire, or feelings of warmth and closeness that a client may have for a psychotherapist or other person.